பாரியளவிலான எரிபொருள் மோசடி – வௌியான அதிர்ச்சித் தகவல்!!
பமுனுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு சொந்தமான முற்றத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தொகை ஒன்றை பொலிஸார் இன்று (12) கண்டுபிடித்துள்ளனர்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் அடையாளம் தெரியாத எண்ணெய் நிரப்பப்பட்ட நான்கு பவுசர்களை பமுனுகம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த எரிபொருள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பல நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, டீசலில் மண்ணெண்ணெய் கலந்து தமது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்கு விநியோகித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் இரண்டு அனுமதிப் பத்திரங்களையும் இரத்துச் செய்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த பவுசர்கள் வத்தளை மற்றும் நீர்கொழும்பில் உரிமம் பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்தி வந்த வத்தளை ஹெந்தலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பவுசர்களும் 13,200 லீற்றர் கொள்ளளவு கொண்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் 8,800 லீற்றர் டீசல், 4,000 லீற்றர் பெற்றோல், 5,000 லீற்றர் மண்ணெண்ணெய் இருந்தது.