நெடுந்தீவில் கஞ்சா மீட்பு!!
நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளை இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்த நிலையில் அவை தொடர்பில் விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”