சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !!
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒத்துழைப்பை வழங்கும் சகல கட்சிகளும் முதலில் ஒன்றாக இணைந்து கலந்துரையாட வேண்டும்.
சகலரும் கலந்துரையாடி யார் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது என தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக கூறினாலும் நாம் அறிந்த வரையில் இன்னமும் நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் கையளிக்கவில்லை.
அதுமட்டுமல்ல நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது ஆதரவு வேண்டுமாயின் எம்முடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வேண்டுமே தவிர அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எம்மால் இணங்கி செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிடுவதற்கும் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இடுவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
வெற்றுக் காகிதத்தில் யார் வேண்டுமானாலும் கைச்சாத்திட முடியும், நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆளுந்தரப்பு சுயாதீன குழு ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோல்பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!
அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!