அது இரகசியம் என்கிறார் மைத்திரி !!
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகும் ஆசை தனக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும், தமது அணிக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், தெரிவிக்கும் மைத்திரி, எத்தனைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது இரகசியம் என்கிறார்.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரதுப் பதவியிலிருந்து விலக வேண்டும். மேலும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வைக் காணும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியச் செயற்குழு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது என்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும்பட்சத்தில் புதியப் பிரதமராக யாரை தெரிவு செய்வது என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியச் செயற்குழு தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் புதிய பிரதமரை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுடன் கலந்துரையாடியே தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது. எமக்கு பெரும்பான்மை இருக்கிறது எனினும் எத்தனைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பது இரகசியமானது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை!!
கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடன்!!
மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 பேர் கைச்சாத்திட இணக்கம் !!