;
Athirady Tamil News

முன்பள்ளி மாணவர்களின் திறன் விருத்தியில் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் மாற்றத்திற்க்கான பாதை திட்டம்!!

0

மாற்றத்திற்க்கான பாதை திட்டத்தில் முன்பள்ளி மாணவர்களின் திறன் விருத்தியுடன் நடத்தை மாற்றங்கள் சாதகமாக அமையப் பெறவேண்டும் என்ற நோக்குடன் முதற் சுற்று பயற்சிகள் முடிவடைந்து. இரண்டாம் சுற்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.சேதுராஜா தெரிவித்தார்.

மாற்றத்திற்க்கான பாதை திட்டம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மாற்றத்திற்க்கான பாதை திட்டமானது யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் 2020ம் ஆண்டு தை மாதத்தில் இருந்து சொண்ட் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகிறது.

இத்திட்டமானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 44 பாடசாலைகள், 20 சிறுவர் இல்லங்கள் மற்றும் 30 சிறுவர்கழங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கென 156 ஆசிரியர்களும் 44 தொண்டர்களும் பயிறப்பட்டுள்ளனர்.
இது கொங்கொங் நாட்டில் பொலிடெக்னிக் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாடத்திட்டம் ஆகும்.

இது வளரிளம் பருவத்தினருக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு கொங்கொங் நாட்டிலே பாரிய வெற்றியடைந்த ஒரு திட்டம் ஆகும்.
இதனை எங்கள் நாட்டின் கலாசாரத்திற்குகேற்ப மாற்றியமைத்து வளரிளம் பருவத்தினரிற்கு மாற்றத்திற்கான பாதை திட்டம் என்ற கருப்பொருளில் 8 அத்தியாயங்கள், 20 அலகுகள் 7000 மாணவர்களுக்கு வெற்றிகரமாக ஆசிரியர்களால் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும் இக் கருப்பொருளை முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிமுகம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 கோட்டங்களில் 435 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப் பயிற்சியானது முன்பள்ளி மாணவர்களின் திறன் விருத்தியுடன் நடத்தை மாற்றங்கள் சாதகமாக அமையப் பெறவேண்டும் என்ற நோக்குடன் முதற் சுற்று பயற்சிகள் முடிவடைந்து. இரண்டாம் சுற்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் ஏராளமான மாற்றங்கள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் சமூகத்தினரால் அடையாளம் காணப்பட்டு அறிக்கையாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல், பாடசாலைகளுக்கு நேரத்திற்கு சமூகம் அளித்தல், வரிசையாக பாடங்களுக்கு செல்லுதல், சீராக சீருடைகளை அணிந்து வருதல், பாடவேளையில் குழப்பம் மேற்கொண்ட மாணவர்கள் இவ் பயிற்சியின் பின் அமைதியாக இருத்தல், பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளித்தல், மாணவர்களுக்கு எற்படுகின்ற சவால்களை எவ்வாறு இலகுவாக வெற்றி கொள்ளமுடியும். போன்றவை ஆசிரியர்களால்
அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இப்பயிற்சியை பெற்ற ஆசிரியர்கள் தங்களுக்குள்ளேயே பாரிய அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இத்தகைய நடத்தை மாற்றங்கள் நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்கும். என்பதிலும் நடைபெறுகின்ற வன்முறைகள், இளம் வயது தற்கொலைகள், பாடசாலை இடைவிலகல், போதைவஸ்து பாவணை போன்றவை இடம்பெறாது, பொறுப்புமிக்க இளம் சமுதாயம் உருவாக்குவதில் இவ் திட்டம் பங்காற்றுகிறது. இத்திட்டம் முடிவுறும் நிலையில் உள்ளது. இதனை சகல பாடசாலைகளிலும் செயற்படுத்தி சமூகம் முழுவதும் பயனுறும் வகையில் ஒழுங்கமைப்பது அனைவரதும் கடமையாகும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.