கோரேகான் பீமா வழக்கு – சரத் பவாருக்கு விசாரணை ஆணையம் சம்மன்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் கோரேகான் பீமா போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா 2017ம் ஆண்டு நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் சர்ச்சைக்குரிய பேச்சால் வன்முறை வெடித்தது. இதில் மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி குற்றம்சாட்டப்பட்ட ரோனா வில்சன், ஷோமா சென், மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மேலும், ஜாமீன் கோரி சுரேந்திர கட்லிங் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், கோரேகான் பீமா வழக்கு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வரும் மே 5 , 6 ஆகிய தேதிகளில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.