;
Athirady Tamil News

வாட்டி வதைக்கும் வெயில்- தெலுங்கானா மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

0

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது.

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று சனிக்கிழமை இயல்பை விட பலமடங்கு அதிகபட்ச வெப்பம் நிலவியது.

குருகிராமில் 46.2 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவானது. நர்னாலில் 45.2 டிகிரியும், ஹிசார் மற்றும் பிவானியில் அதிகபட்ச வெப்பநிலை 45.4 மற்றும் 44.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாதம் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா பகுதிகளில் உச்சபட்ச் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் ஹரியானா மாநிலம் அம்பாலா, ரோஹ்தக், கர்னால் மற்றும் சிர்சா ஆகிய பகுதிகளில் கடும் வெப்பம் காணப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் 47 டிகிரி செல்ஷியசை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் உள்ளிட்டோர் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் தெலுங்கானாவின் ஒரு சில மாவட்டங்களில் மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.