அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை !!
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை அதிசிறப்பு அரசிதழை வெளியிட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசு நீக்கியிருந்த நிலையில் அரிசிக்கு மீளவும் இன்று மே 2ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேகவைத்து அவித்துப் பெறப்பட்ட உள்நாட்டு அரிசி (மொட்டைக்கறுப்பன், ஆட்டக்காரி தவிர்ந்த) ஒரு கிலோ கிராம் அதிகபட்ச சில்லறை விலையாக 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேகவைத்து அவித்துப் பெறப்பட்ட வெள்ளை/ சிவப்பு சம்பா ஒரு கிலோ கிராம் (சீரக சம்பா தவிர்ந்த) 230 ரூபாயாகவ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 260 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”