பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!!
கடுவெல நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் அலுவலகத்தினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீதித்துறை சேவை அமைப்பு மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றினால் இந்த விடயம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கடுவெல நீதவான் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பாதுகாப்பையும் உடனடியாக உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.