வேலணை சரவணை பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமியொருவர் உயிரிழப்பு!!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை சரவணை பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமியொருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ரூபன் மதுசிகா ( வயது -11 ) என்ற சிறுமியே உயிரிழந்தவராவார்.
சிறுமி கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் சிறுமி ஏற்கனவே நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”