சுவிஸ் “பேர்ண் முருகன் கோயில்” இன்றைய பொதுச்சபைக் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது ஏன்? விவரமான நேரடி செய்திகள்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் “பேர்ண் முருகன் கோயில்” இன்றைய பொதுச்சபைக் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது ஏன்? விவரமான நேரடி செய்திகள்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் நிர்வாகத் தெரிவுக்கான “பொதுச்சபைக் கூட்டம்” கடந்த மூன்று வருடமாக நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், சட்டத்தரணி மூலம் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாக “இன்றையதினம் (08.05.2022) காலை பத்து மணிக்கு கூடுவதாகவும், அதில் கோயிலுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங் கட்டியவர்களே கலந்து கொள்ளலாம்” எனும் அறிவித்தல் கடிதம் குறிப்பிட்ட சிலருக்கு அனுப்பிய நிலையில் இன்றையதினம் சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் நிர்வாகத் தெரிவுக்கான “பொதுச்சபைக் கூட்டம்” கூடியது.
ஆயினும் தற்போதைய நிர்வாகத்தில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே மண்டபத்துக்கு உள்ளே இருந்ததுடன், மண்டப வாசலில் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுமார் ஐந்து பிரத்தியேகக் காவலர்கள் பணம் செலுத்தி நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதேவேளை பத்துமணியளவில் பல நூற்றுக்கணக்கான சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடியதுடன் அனைவரும் உள்ளே செல்ல முயன்ற போது, அச்சம் அடைந்த நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சில வாகனங்களில் உடனடியாக ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் “அனைவரையும் கலைந்து வீடு செல்லுமாறு” கோரிய போதிலும்,
அதுக்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் “ஆலய யாப்பு விதியின்படி” ஆலயத்துக்கு பல வழிகளிலும் உதவி செய்பவர்கள் அனைவரும் ஆலய பொதுச்சபையில் கலந்து கொள்ளலாம் என்பதையும், ஆலயத்து தொண்டர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பதினெட்டு வயதுக்கு மேற்படடவர்கள் பொதுச்சபையில் கலந்து கொள்ளலாம் என்பதையும், அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது” என்பதையும் எடுத்துக்கூறி விளங்கப்படுத்தியதை அடுத்து, மண்டபத்துக்குள் உள்ளே இருந்த தற்போதைய நிர்வாகசபைத் தலைவரை அழைத்து பொலிஸார் உரையாடினர்.
பொலிஸாருடனான உரையாடலின் போது, பொதுமக்கள் மத்தியில் “ஆயிரம் சுவிஸ் பிராங் கட்ட வேண்டும் என்பது யாப்பில் இல்லை என்பது தற்போதே தனக்குத் தெரியும் எனவும், இவ்வளவு காலமும் இதுகுறித்து அறிந்து இருக்கவில்லை எனவும், ஆகவே மீண்டும் பொதுச்சபையைப் பிறிதொரு நாளில் கூட்டுவதாகவும்” தலைவர். திரு.தீபன் தெரிவித்ததாக தெரிய வருகின்றது.
ஆயினும் பொலிஸார் மூன்று மாதத்துக்குள் “பொதுச்சபையைக் கூட்ட வேண்டும் எனவும், அதுக்குரிய அறிவித்தலை இம்மாதம் (மே) முப்பத்தியொராம் திகதிக்குள் அறிவிக்க வேண்டுமெனவும்” அறிவுறுத்தி உள்ளனர்.,அத்துடன் அந்த பொதுச்சபையில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளலாம் எனவும், அந்த பொதுச்சையிலேயே இனிமேல் ஒவ்வொருவரும் எவ்வளவு கட்ட வேண்டுமென தீர்மானிக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை கலைந்து செல்ல பொதுமக்கள் மூன்று மணித்தியாலமாக மறுத்து அங்கு காத்து இருந்த நிலையிலும், போலீசாரும் பொறுமை காத்து அங்கு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய அடியார்களுக்காக, அந்த ஆலய யாப்பை பகிரங்கத்தில் கீழே பதிவேற்றி உள்ளோம்.)
(சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய அடியார்களுக்காக, அந்த ஆலய யாப்பை பகிரங்கத்தில் கீழே பதிவேற்றி உள்ளோம்.)
§§§ சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய தொடர்புபட்ட செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/howisthis