முன்னாள் அதிபர் மரணம் – ஐக்கிய அமீரகம் செல்லும் இந்திய துணை ஜனாதிபதி..!!
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அரபு அமீரகம் செல்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஷேக் கலீஃப்பாவின் மறைவிற்கு இரங்கல் இந்தியா சார்பில் தெரிவிக்க இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அரபு அமீரகம் செல்கிறார்.
ஏற்கனவே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் ஷேக் கலீஃபாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். கலீஃபாவின் மறைவிற்கு இந்திய அரசு தேசிய அளவில் துக்கம் அனுசரித்தது.