சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!
பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளது.
எனினும், வாக்களித்து இன்றைய நாளை செலவழிக்காமல் ஒருமித்த கருத்துடன் பிரதி சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஆளும், எதிர்க்கட்சி கட்சிகளைச் சேர்ந்த பலரும், ஒருமித்த கருத்துக்கு இணக்கம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்னும் நேரமிருக்கிறது. ஒருவரின் பெயரை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கேட்டார். எனினும், எந்த தரப்பினரும் அதற்கு இணங்கவில்லை.
அதனையடுத்தே பிரதி சபாநாயகர் தெரிவுக்காக, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!