’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ !!
புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து, புலிகளை பலவீனப்படுத்திய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு அத்திபாரமிட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார். தமிழர்களிடம் இருந்து தலைவர்களை தேடுங்கள், மாறாக முகவர்களை தேடவேண்டாம் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று(17) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராகவும், சரத் பொன்சேகா இராணுவத் தளபதியுமாக இருந்து தமிழ் மக்கள் மீது இனவழிப்பு யுத்தத்தை செய்தார். ஆயுதங்கள் மௌனித்துவிட்டதாக புலிகள் அறிவித்தன் பின்னரும் கூட இசைப்பிரியா போன்ற பலர் இராணுவ தளபதிகளுக்கு முன்பாக கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.
இந்த இனப்படுகொலைக்கு பிரதமர் ரணிலே அப்போது வழியேற்படுத்திக்கொண்டார். இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பதற்கான சமாதான உடன்படிக்கையை ரணிலே செய்தார். இதன்போது புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து புலிகளை ரணில் பலவீனப்படுத்தினார். அத்தோடு, புலிகளால் பலவீனப்பட்டிருந்த இராணுவத்தை மீள கட்டியெழுப்ப ரணிலே அத்திபாரமிட்டார் எனவும் தெரிவித்தார்.
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!