‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!
எதிர்க்கட்சியில் இருந்தபோது ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ரணில், பிரதமராக பதவியேற்றவுடன் கொள்கையை மாற்றியுள்ளார். பிரதமரின் நிலைப்பாட்டை எண்ணி வெட்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு மக்கள் கூறுகையில் அது தொடர்பான கலந்துரையாடல்களை பாராளுமன்றத்தில் முன்னெடுப்பது அவசியமாகும். இதன்படி அதற்கு தடைபோடாது அதனை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தி ஜனாதிபதி தொடர்பான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
சபையின் அலுவல்கள் தொடர்பான விடயத்தில் இன்றைய நாள் அமர்வு தினத்தின் நிலையியற் கட்டளைப்படி பிரேரணையாக இந்த பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரேரணையாகும். ஜனாதிபதியை பதவி விலகிப் போகுமாறு மக்கள் கோருகின்றனர். மக்கள் என்ன கூறுகின்றனர் என்பதனை அறிந்துகொள்ள சிறந்த சந்தர்ப்பமாகும். இதுவே நாட்டில் இருக்கும் கலந்துரையாடலாக உள்ளது.
தற்போதுள்ள பிரதமர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது, ஜனாதிபதி தொடர்பான பிரேரணையை வாக்களிப்பதாக கூறினார். இதற்கு சாதகமாக வாக்களிப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் கூறியிருந்தார். ஆனால் இப்போது மாறியுள்ளார். பிரதமராக பதவியேற்று கொள்கையை மாற்றியுள்ளார். அவ்வாறான பிரதமரே இருக்கின்றார். பிரதமரின் நிலைப்பாட்டை எண்ணி வெட்கப்பட வேண்டும். ராஜபக் ஷர்களுக்காக ஒரு பணியை எடுத்துக்கொண்டு அதனை நிறைவேற்றி வருகின்றார் என்றார்.
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!