;
Athirady Tamil News

மட்டக்களப்பில் மாத்திரம் ஏன் தடை!!

0

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு கோட்டா கோ கம உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தல் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருவதாகதாக தெரிவித்த அவர், ஆனால் மட்டக்களப்பில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 600 பேர் இதனால் நினைகூரலில் ஈடுபடமுடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வை ஒரு அமைப்போ அல்லது கட்சியோ ஏற்பாடு செய்ததற்கான ஆதாரம் இல்லாத நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மக்கள் நினைவுகூரல் நிகழ்வில் ஈடுபடுவதைத் தடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பதாதைகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் அகற்றுமாறு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்க அனுமதி வழங்கப்படுமென பிரதமர் உறுதியளித்திருந்த நிலையில், இந்த விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.