;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ்: ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு பயண தடை விதித்தது ரஷியா..!!

0

22.5.2022

05.00: உக்ரைனில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சிவப்பு கம்பளத்தில் ஓடினார்.

எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்றார். உக்ரேனிய கொடியை தனது உடலில் வரைந்து இருந்த அவர், எங்களை கற்பழிப்பதை நிறுத்து என்ற வார்த்தைகளை எழுதியிருந்தார். அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

00.40: போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உடன் மோதல் போக்கை ரஷியா கையாண்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் உள்பட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக பயண தடை விதித்து ரஷியா உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.