மாவத்தகம பகுதியில் துப்பாக்கி சூடு!!
மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று (21) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிங்கதெனிய, பரகஹதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது தெரியவரவில்லை, சந்தேக நபர்களை கைது செய்ய மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.