“நான் அமைச்சராக இதுதான் காரணம்” !!
தற்போதைய பின்னணியில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவிக்கவில்லை, இருப்பினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையினாலும், சுயாதீனமாக செயற்படுமாறு அழைப்பு விடுத்ததாலும் நாட்டு மக்களுக்காக அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என புதிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் தெரிவித்தார்.
நீதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு என்றுமில்லாத வகையில் மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, அத்தியாவசிய சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்க வேண்டும்.
அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்படாவிடின் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. தற்போதைய பின்னணியில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவிக்கவில்லை, இருப்பினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையினாலும், சுயாதீனமாக செயற்படுமாறு அழைப்பு விடுத்ததாலும் நாட்டு மக்களுக்காக அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளேன்.
அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பு நிலை காணப்படுகிறது.மக்களை குறை கூறுவது பயனற்றது.இந்த அரசியல் கலாச்சாரம் இலங்கைக்கு பொருத்தமற்றது.
பாராளுமன்றில் குழு அடிப்படையிலும்,கட்சி அடிப்படையிலும் வேறுப்பட்டு குடும்ப ஆட்சியை பாதுகாக்க முயற்சிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்காததன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது.
ஆகவே 21ஆவது திருத்தம் ஊடாக 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக இலட்சினங்களை மீள செயற்படுத்துவது அத்தியாவசியமானது என்றார்.