’உரம் வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க முடியாது’ !!
சிறுபோக விவசாயத்திற்கு உரம் வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க முடியாது எனவும் பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதற்கான பொறுப்பினை ஏற்க முடியும் என்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள காரணத்தினால் விரைவாக உரத்தை விநியோகிக்க முடியாது.
காசு கொடுத்து கூட உரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.உர இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமை அதற்கு பிரதான காரணியாக உள்ளன.
இரசாயன உர நிறுவனத்திற்கு 23 மில்லியனும்,சேதன பசளை உற்பத்தி நிறுவனத்திற்கு 5000மில்லியனும் செலுத்தப்படவுள்ளதால் உரத்தை கொள்வனவு செய்வது சிக்கல் தன்மையில் உள்ளது.ஆகவே ஒரே நாளில் உரத்தை இறக்குமதி செய்ய முடியாது.
சிறுபோக விவசாய நடவடிக்கைக்கு உரம் விநியோகிப்பதற்கான பொறுப்பை ஏற்க முடியாது. பெரும்போக விவசாயத்திற்கான உர விநியோகத்திற்கான பொறுப்பினை ஏற்க முடியும்.விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்க விரும்பவில்லை என்றார். (