;
Athirady Tamil News

வட மாநிலங்களில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் புதிய திட்டம்..!!

0

5 மாநில சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது என்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாட்கள் நடந்த சிந்தனை அமர்வு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அரசியல் விவகாரக்குழு உள்பட 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுபடி இந்த குழுக்களை சோனியா நியமித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பல்வேறு வியூகங்கள் அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்துத்துவா, இந்தி மொழியை வைத்து பா.ஜனதா மக்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது. காங்கிரசும் தற்போது அதே பாணியில் பயணிக்க முடிவு செய்துள்ளது. மென்மையான இந்துத்துவாவை ஏற்கனவே கடைபிடிக்க தொடங்கி விட்டது.

தற்போது இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. வட மாநிலங்களில் பா.ஜனதாவை வீழ்த்த இந்தியை அதிக அளவில் எல்லா வகைகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்பு என அனைத்து விதமான செயல்களிலும் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இந்த முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்தி துறை தலைவர் சுனில் சாஸ்திரி இது தொடர்பாக கூறியதாவது:-

இந்தி பேசும் மாநிலங்களில் அந்த மொழிக்கும் முக்கியத்தும் அளிக்கப்படும். காங்கிரஸ் செய்தி தொடர்பாக நிருபர்களை சந்திக்கும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பார்கள்.

உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள கிராம மக்களுக்கு ஆங்கிலம் புரியாது. இதனால் அங்கு இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தென் மாநிலங்களில் கால் பதிக்க முயற்சிகள் மேற்கொண்டாலும் பா.ஜனதாவின் முக்கிய வாக்கு வங்கி இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.