50 ரயில்கள் மேலதிகமாக சேவையில் !!
பொதுப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும் என வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குணரத்ன மற்றும் போக்குவரத்து துறை நிபுணர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் ஆலோசனைகளில் இருந்து விரைவாக நடைமுறைப்படுத்தக்கூடிய முன்மொழிவுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, தற்போதுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கூடுதலாக 50 ரயில் சேவைகள் சேர்க்கப்படும் என தெரிவித்த அவர், மேலும் நீண்ட கால முன்மொழிவுகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பிற தரப்பினருடன் மீண்டும் விவாதிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படும். என்றார்.