அரச நிதியை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் எடுத்துள்ள தீர்மானம்!!
அரச நிதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக 15 குழுக்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நிகழ்த்திய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அந்தக் குழுக்களில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுமெனவும் அதற்கான காலம் மற்றும் வழிமுறைகளை கட்சித் தலைவர்கள் முடிவுசெய்யலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.