நெருக்கடிக்கு அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு (வீடியோ)
விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நிறைவேற்று அதிகாரி முதல் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அமைச்சின் செயலாளர் முதல் கீழ்மட்ட அதிகாரி வரையிலான சலுகைகளை பெற்றுக்கொள்வதை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.