சிவலிங்க வழிபாடு நடத்த ஞானவாபி மசூதி வளாகத்திற்கு செல்ல முயன்ற சாமியார் தடுத்து நிறுத்தம்..!!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் உள்ளது. இங்கு பக்தர்களுடன் சென்று இன்று பூஜைகள் செய்யபோவதாக சுவாமி அவி முக்தேஷ்வரானந்த் என்ற சாமியார் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
இருந்தாலும் அவர் பக்தர்களுடன் ஊர்வலமாக சென்றார். உடனே போலீசார் அவர்களை வித்யா மத் பகுதியில் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.