யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடமும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வில்!
ஈழ வளநாட்டின் மகுடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது நீண்டதொரு வரலாற்று பின்னனியினை கொண்ட தேசியப் பல்கலைக்கழகம் ஆகும். “மெய்பொருள் காண்பது அறிவு” என்கின்ற மகுடவாசகத்துக்கு அமைவாக இங்கு செயற்படும் பத்து பீடங்களும் தொடர்ச்சியான கற்பித்தல், ஆய்வு செய்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அதற்ம் அப்பால் பிரதேச தேசியரீதியான சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய பங்களிப்பினை செய்துவருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற பீடங்களில் குறிப்பாக 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடமானது முதன்மைவாய்ந்த பீடமாக விளங்குவதுடன் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றதுடன் தற்போது இப்பீடமானது திருநல்வேலி கலாசாலை வீதியில் கம்பீரமாக புதுப்பொலிவுடன் அமைந்து காட்சி தருகின்றது.
இப்பீடத்தில் சிரேஸ்ட பேராசிரியர், பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் விரிவுரையாளர்கள் உட்பட 60 க்கு மேற்பட்ட கல்விசார் உத்தியோகத்தர்களும் 20 க்கு மேற்பட்ட கல்விசாரா ஊழியர்களும், “தம் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதற்கமைய கடமை செய்து வருகின்றார்கள்.
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற முன்னோர்களின் வாக்குக்கு அமைவாக பல விரிவுரையாளர்கள் அண்மைக்காலத்தில் இந்தியா, பங்களாதேசம், சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல் கடந்து, கண்டம் கடந்து சென்று தமது கலாநிதிப் பட்டத்தினை கணக்கியல், சந்தைப்படுத்தல், மனிதவள முகாமைத்துவம், நிதி முகாமைத்தும், சுற்றுலா போன்ற துறைகளில் நிறைவு செய்ததுடன் மேலும் போதிய அளவு தேசிய மற்றும் சர்வதேச ரீதியான செயற்றிட்டங்களில் பணி செய்த அனுபவங்களுடன் உள்ளனர். இத்தகைய சிறந்த புத்திஜீவிகளினை உள்வாங்கியுள்ள பீடத்துடன் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (Sri Lanka Institute of Marketing) இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம் (Chartered Accountants of Sri Lanka) , பங்குப் பரிவர்த்தணை ஆணைக்குழு (Security Exchange Commission) போன்ற தொழில் வாண்மை நிறுவனங்களுடனும் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களினை ஏற்படுத்தி இணைந்து செயற்பட்டு வருகின்றது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் முகாமைத்துவக்; கற்கைகள்; வணிக பீடத்துடன் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் பல்வேறுபட்ட சமூகமட்ட அபிவிருத்தி திட்டங்களிலும், வலுவூட்டல் நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது. ஆனாலும் நீண்டகாலமாக யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்துக்கும், முகாமைத்துவக்; கற்கைகள்; வணிக பீடமும் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற வேட்கையானது நீண்ட காலமாக கருவில் இருந்த போதும், 08.06.2022 ஆம் ஆண்டு ஏற்படுத்தி கொள்ளப்படுகின்ற இவ் உடன்படிக்கையுடன் சாத்தியமாகிற்று. மேலும் கூட்டாக செயற்படுதல் என்பது சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டது இவ் உடன்படிக்கை இரு நிறுவனங்களையும் வளர்ச்சிப் பாதையில் கால் பதிக்க வழிகோலும் என்பதில் ஐயப்பாடில்லை.
இவ் உடன்படிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்கள், விரிவுரையளர்கள் மற்றும், புரவலா சமூகம் போன்றவர்களுக்கும் பல்வேறு வழிகளில் நன்மையினை ஏற்படுத்தும். இப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் வாயிலாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது பின்வரும் வழிகளில் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு பாரிய அளவில் பின்வரும் விதத்தில் பங்களிப்பினை வழங்க முடியும். யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு தேவையான பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாட்டுத்திட்டங்கள், போன்றனவற்றுக்கு வளவாளர்களாக எமது பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் தொழிற்படுதலுடன் கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களினை வகுப்பதில் உதவுதல். குறுகியகால டிப்ளோமா, மற்றும் சான்றிதழ் கற்கைகளினை அறிமுகப்படுத்துதல் மூலமாக அங்கத்தவர்களின் தொழில் சார் அறிவினை பெருக்கி கொள்ள உதவுதல்.
தொமிற்துறை நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற நெருக்கடி நிலையினை சிறந்த முறையில் முகாமை செய்வதற்குரிய தந்திரோபாய ஆலோசனைகளினையும் உதவிகளினையும் வழங்குதல், ஆராய்ச்சி மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்குதாரர்களாக செயற்படுதல் வணிகத்தின் வளர்ச்சி ஆராய்ச்சிகள் ஆலோசனைகள் முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. இவ்வாறான ஆலோசனைகள் தேவைப்படும் போது முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடத்தின் நிபுணர் குழு தேவையான ஆலோசனைகளை வணிக குழாமுக்கு வழங்குவதன் மூலம் தொழிற்துறையின் செயற்பாட்டினை மேம்படுத்த உதவும்.
இவ் உடன்படிக்கையின் மூலம் மாணவர் சமூகம் பல்வேறு வழிகளில் நன்மையினை பெற்றுகொள்ள வாய்ப்புக்கள் உள்ளது. மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பின் ஓர் அங்கமாக அமைந்துள்ள உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பினை பெற்று கொள்வும். மாணவர்களுக்கு பகுதி-நேர வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுதலுக்கு உதவுதல். யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம் செயற்படுத்தும் செயற்திட்டங்களில் மாணவர்கள் நேரடியாக பங்குபற்றி பயிற்சிகளை பெற்றுக்கொள்வதன் வழியாக மாணவர்கள் தங்கள் நடைமுறை அறிவினை விருத்தி செய்துகொள்வதுடன் விழிப்புணர்வையும் பெற்றுக்கொள்வர். சில மாணவர்கள் தொழில் முயற்சியாளர்களாக காணப்படுவதனால் இத்தகைய மாணவர்களின் பங்குபற்றுதல், உள்நாட்டு மட்டத்திலும் சர்வதேசே மட்டத்திலும், புதிய உற்பத்திகளுக்கு அங்கீpகாரம் பெற வழிசெய்யும். இதனால் மாணவர்கள் தமது உற்பத்திகளுக்கு அதிக சந்தைவாய்ப்புக்களை பெறுவார்கள்.
மாணவர்களிடையே காணப்படுகின்ற தொழில் முயற்சியாளர்களினை யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்வதுடன் ஆண்டுதோறும் முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடத்தினால் நிகழ்த்துவதற்குதீர்மானித்திருக்கும் “இளம் தொழில் முயற்சியாளர் தினத்தில்” சிறந்த மாணவர்களுக்கான விருதினை வழங்குதல். இவ்வாறு இந்த அற்புதமான புரிந்துணர்வு உடன்படிக்கையின் வாயிலாக மாணவர்கள் மேற்குறிப்பிட்ட நன்மையினை அனுபவித்துக் கொள்ள முடியும்.
மேலும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் முகாமைத்துவக்; கற்கைகள்; வணிக பீடமும் ஒன்றிணைந்து வணிகக் கண்காட்சியினை எதிர்காலத்தில் ஏற்hடு செய்வதுடன் தொடர்ச்சிய இரு அமைப்புகளும் சேர்ந்து தொழில்முயற்சி பற்றி தொடர்ச்சியான விழிப்புணர்வினை மக்கள் மத்தியிலும்இமாணவ சமூகத்துக்கு இடையேயும் ஏற்படுத்தல். இப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பேறாய் இலையுதிர் காலத்து மரம் போல் சோபை இழந்து காட்சிதரும் வணிகமும் வணிகர்களும் இளவேனில் காலத்தில் காலடி வைப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இதனூடாக மாணவர்களும் பரந்த வெளிப்பார்வையை பெற்று தம்மை சமூக ஊட்டங்களுக்குள் உள்வாங்கிக்கொள்வார்கள் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க இடமில்லை.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”