அதிக விலைக்கு அரிசி விற்றால் அபராதம்!!
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேபோன்று குறித்த வர்த்தகருக்கு எதிராக 06 மாத சிறைத் தண்டனையை விதிப்பதற்கான இயலுமையும் உள்ளதென நுகர்வோர் விவகார மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மொனராகலை மற்றும் அனுராதபுரத்திலிருந்து 4,075 கிலோ கிராம் அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது.
மொனராகலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,575 கிலோகிராம் அரிசியை கைப்பற்றியதாகவும், அனுராதபுரத்திலிருந்து 1,500 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அதிகாரசபை, அரிசி தொகைளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.