வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு!! (படங்கள், வீடியோ)
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவின் வற்றாப்பளை பதியில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விவசாக பொங்கல் நிகழ்வு கடந்த 13.06.2022 திங்கட்கிழமை காலை தொடங்கி இன்று செல்வாய்கிழமை அதிகாலை வரையில் பாரம்பரிய முறைப்படி சிறப்புற நடைபெற்றுள்ளது.
அம்மன் பொங்கல் நிகழ்விற்காக கடந்த 06.06.2022 அன்று முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து சென்று முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடல்நீரீல் தீர்த்தம் எடுத்து கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்னிதியில் அணையா விளக்காக எரிந்து காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து 13.06.2022 திங்கட் கிழமை அதிகாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு பொங்கல் நிழக்வுகள் நடைபெற்றுள்ளன.
ஆதிகாலை 12.00 மணிக்கு பொங்கல் நிழக்வுக்கான ஏற்பாடுகளாக மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு வளர்ந்து நேர்ந்து பொங்கல் பானை தயார் செய்யப்பட்டு பூசாரியால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கப்பட்டுள்ளது.
கண்ணகி அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டு சிறப்பு பூசை வழிபாடுகள் அதிகாலைவேளையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தொடர்ந்து சடங்குகள் (குளிர்வித்தல்,தடைவெட்டுதல் எனப்படும் சடக்குகளுடன் பொங்கல் நிறைவு பெற்றது