;
Athirady Tamil News

திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கி உயிருடன் மீண்டவர்- அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்..!!

0

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட், ராட்சத திமிங்கலத்தின் வாய்க்குள் 40 வினாடிகள் சிக்கி தவித்து பின்னர் உயிருடன் மீண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: ஒரு சாதாரண நாளில் அது நடந்தது.

நான் கடலுக்கு சென்று தண்ணீரில் இறங்கினேன்,இரண்டு டைவ்கள் செய்தேன். பின்னர் மூன்றாவது டைவ் செய்த போது, நான் கீழே கீழே கீழே இறங்கினேன். ஒரு சரக்கு ரயிலைப் போல நான் இழுக்கப்பட்டேன். பின்னர் அந்த இடம் திடீரென்று கருப்பாகிவிட்டது. எனது உடலிலும் அழுத்தத்தை உணர முடிந்தது. ராட்சத திமிங்கலத்தின் வாயில் இருப்பதை உணர்ந்தேன். நான் அந்த பொருளைப் பிடிக்க நினைத்தேன். உள்ளே இருந்து நான் வெளியேற முயற்சிக்கிறேன்.

அது [திமிங்கலம்] வெறித்தனமாக இருந்தது.நான் இறக்க போவதாக நினைத்தேன். நான் என் குழந்தைகள் மற்றும் என் மனைவியைப் பற்றி நினைத்தேன்.அதிர்ஷ்டவசமாக, அந்த பாலூட்டி கடலின் மேற்பரப்புக்குச் சென்று தலையை அசைக்க தொடங்கியது. இதனால் நான் அதன் வாயிலிருந்து மேலே பறக்கிறேன். நான், கடவுளே என்று கத்தினேன். திமிங்கலத்தின் வாயில் இருக்கும் போது, ​என்து நுரையீரல் வெடிக்கவில்லை என்பதால் நன்றியுள்ளவனாக இருந்தேன் என்று நினைத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.