தென்னைமரம் விழுந்ததில் 10 மாணவர்கள் காயம் !!
தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதுடன்,வெலிமட இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரம் ஒன்று முறிந்து, வகுப்பறையின் மீது விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் வெலிமட இந்துக்கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர்கள் காயமடைந்து வெலிமட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் வெலிமட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.