நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை வேண்டும் – மாகாநாயக்க தேரர்கள்!!
நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் காணப்பட வேண்டும் என்பதுடன், அதனை இல்லாது செய்ய கூடாது என மாகாநாயக்க தேரர்கள் வலியுறத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக தேசிய கொள்கைகள் மற்றும் ஆணைக்குழுக்கள் உன்பன அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தமக்கு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவரை 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்வதாக அல்லது மக்கள் தெரிவு செய்ய வேண்டுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.