சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்)
சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்)
சுவிட்சர்லாந்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், (Shanakiyan Rasamanickam) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் ஆகியோர் சூரிச் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
சுவிஸ் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முக்கிய அரசியல் கலந்துரையாடலுக்காக சுவிட்சர்லாந்திற்கு கடந்த (14-06-2022) வருகை தந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது முகநுால் பதிவில் (புளுகிக்) குறிப்பிட்டுள்ளார்.
“அவர்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி, சாணக்கியன், சுகாஸ் ஆகியோருக்கும் மகிழ்ச்சி. இந்த வாரத்தில் இருவரையும் ஒன்றாக நான் சந்திப்பேன். தமிழ் தேசிய உணர்வு உள்ளவர்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும்.
அதற்காக தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்படும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அன்புரிமையுடன் வேண்டுகிறேன்” எனவும் அவர் (இரா.துரைரெட்ணம்) மேலும் தெரிவித்துள்ளார்.
சாணக்கியன் சுவிட்சர்லாந்திற்கு பயணமான உண்மைக் கதை..
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக ரீரியான இளையவர்களின் ஒன்று கூடல் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்று வருகிறது.
(15.06.2022 – 22.06.2022) வரை இலங்கையிலிருந்து சாணக்கியன் – சுகாஸ், ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரக பெண் அதிகாரி , முஸ்லிம் பிரதிநிதி மற்றும் ஒரு சிங்கள பிரதி நிதி கலந்து கொண்டுள்ளனர்.
இங்கு இலங்கை பிரச்சினையே அல்லது ஈழத்தமிழர் விவகாரமே கலந்துரையாடப்பட மாட்டாது என்பதுடன் இது பொதுவான கருப்பொருளில் மட்டுமே இக் கலந்துரையாடல் இடம்பெறும் என சுவிட்சர்லாந்தின் தெற்காசிய விவகாரங்களுக்கு பெறுப்பான முக்கிய அதிகாரி உறுதிப் படுத்தினார்,
சில ஊடகங்கள் இலங்கை பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து வருகை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பிலே இத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதில் என்ன சுவாரசியம் என்றால், மூத்த ஊடகவியார் எனப்படும் (தன்னைத்தானே கூறிக் கொள்ளும்) இரா.துரைரெட்னம் எழுதியது போலிச் செய்தி என்பதுடன் இதனை சுமந்திரன் – சாணக்கியனின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதுமே வேடிக்கை.
யார் இந்த இரா துரைரெட்னம்
தொடக்க காலத்தில் மட்டக்களப்பில் பல்வேறு கொலைகளுடன் தொடர்பு உடைய தமிழ் அமைப்பின் அலுவலகத்தில் இருந்து கொழும்பு ஊடகங்களுக்கு TELOவின் 1989ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஜ—–வின் தொலைநகல் ஊடாக செய்திகளை அனுப்பி தன்னைத் தானே ஊடகவியலாளர் என அறிமுகம் செய்து ஜ—-வின் கொலைகள் ஊடக வெளிச்சத்தில் படாமல் அவரைப் பாதுகாத்த ஊடக ஜாம்பவான்..
அது மட்டுமல்லாது ஜ…. லண்டனிற்கு ஓடிய பின்னர் 1994 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்திடம் சென்று சரணடைந்து, தன்னை தமிழ் தேசியவாதியாக அடையாளப்படுத்தி விடுதலைப் புலிகளையும் ஏமாற்றி தமிழ் தேசியவாதியானார்.
சுவிட்சர்லாந்திற்கு இரா.துரைரெட்னம் வந்த பின்னர் ஜ….. பல முறை சுவிஸ் சென்று அவரை சந்தித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரா. துரைரெட்னத்தை அறியாத பலர் மூத்த ஊடகவியலாளர், துணிவானவர் என புகழ் பாடுவது வேதனையானது. ஈழ விடுதலைப் போராட்டத்தையோ புலிகளின் தலைவரான தமிழீழ தேசியத் தலைவரையோ வெளிப்படையாக ஆதரிக்காமல் நழுவல் கதை சொல்லும் ஒரு போலித் தேசியவாதி.
தொடக்கத்தில் இரா. துரைரெட்னத்தை சுமந்திரனிற்கு பிடிக்காது காரணம் சுமந்திரனிற்கும் – துரைரெட்னத்திற்கும் மட்டுமே தெரிந்த இரகசியம், பின்னர் 2015இன் பின்னர் ஓரளவு நெருக்கம்.
அதன் பின்னர் இரா.துரைரெட்னத்தின் தங்கையை திருமணம் செய்துள்ள கல்வி அதிகாரி சுமந்திரனிற்கு தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்ததன் மூலம் அறிமுகமாகி 2020ம் ஆண்டு தேர்தலில் சுமந்திரனின் அபிமானம் வென்ற விசுவாசியானார் துரைரெட்னத்தின் மச்சான்.
அதன் பின்னர் துரைரெட்னத்தை கேட்கவா வேண்டும்? சுமந்திரனின் மடியில் அமர்ந்து விட்டார், அதே தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்ட சாணக்கியனிடமும் நெருக்கத்தை ஏற்படுத்தினார்.
தமிழ் தேசியம் பேசி, தமிழ் தேசிய நீக்கல் செய்யும் அனைவரையும் அளவு கடந்து நியாயப்படுத்துவதில் இரா.துரைரெட்னத்திற்கு நிகர் அவரே ஆவார்.
பிரிக்கேடியர் காந்தன் – தளபதி தம்பா
2009வரை தேசியத் தலைவரே இவர்களின் தலைவர் பின்னர் தேசியத் தலைவரைக் கூறி பிழைப்பு நடத்தும் போலிப் புலிகளின் பிரிக்கேடியர் – தளபதி.
மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறி 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாணக்கியனுக்காக பல மில்லியன் சுவிஸ் பிராங், யுரோக்களை அள்ளி இறைத்த தனவந்தர்கள்.
சாணக்கியன் இள இரத்தம், மட்டக்களப்பின் கொடை என தனிநபர்களுக்கும் பணம் கொடுத்து கட்டுரை எழுதி விளம்பரப்படுத்தும் விசித்திரமான தளபதிகள்.
சுமந்திரன் – சாணக்கியன் தமிழ் தேசிய நீக்கல் அரசியல் செய்வதை அறிந்தும் அவர்களை ஆதரிக்கும் நோக்கம் பலருக்கும் புரிவதில்லை.
டென்மார்க்கில் உள்ள தளபதி தம்பா மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பிரிக்கேடியர் காந்தன் போன்றவர்கள் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு சாணக்கியன் ஊடாக இரு முறை இலங்கை இராணுவ தளபதிகளில் ஒருவரான கமால் குணரட்னவுடன் கதைத்துள்ளதை சாணக்கியன், சுமந்திரனிடம் கூறியுள்ளதாக இரா.துரைரெட்னம் இம்முறை இலங்கைப் பயணத்தில் யாழில் சில ஊடகவியளாளர்களை சந்திக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் “புலி வருகிறது.. புலி வருகிறது” எனக் கூறி எல்லா புறாடு (சுத்துமாத்து) வேலையையும் இவர்கள் செய்கிறார்கள் என ஆதங்கப்பட்டதாக இவரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
யார் இந்த இராசமாணிக்கம் சாணக்கியன்??
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக மகிந்த ராஜபக்சவால் சாணக்கியன் நியமிக்கப் பட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அபிவிருத்தி தொடர்பான பட்டிருப்புத் தொகுதியின் கூட்டத்தில் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 69வது பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பு காலத்தின் நான்காவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளை ஏற்பாடு செய்த ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற போது மகிந்தவின் நிகழ்வை மட்டக்களப்பில் மிக பிரமான்டமாக செய்து தென்னிலங்கையின் பாராட்டைப் பெற்றவர் இவராவார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 2017வரை பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராவும் மகிந்த மற்றும் கோட்டாபயவின் நெருங்கிய சகாவாகவும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இணைத் தலைவராகவும் இருந்தவர் சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன்.
இவரின் கீழ் 2014ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருன் தம்பிமுத்துடன் இணைந்து கல்முனையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராக சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிராக, இலங்கை அரசை ஆதரித்து ஐ.நாவுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தியதையும் மூத்த ஊடகவியலாளர் என தன்னைத்தானே கூறிக் கொள்ளும் இரா. துரைரெட்னம் மறந்திருப்பது இங்கு வேடிக்கையானது.
நன்றி.. சமூகம்.காம்
சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (வீடியோ)
மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? (படங்கள், வீடியோ)