சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தவுள்ள பொலிஸார்!!
எதிர்வரும் இரண்டு வாரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த ஆண்டு 1202 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், 96 சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, பலரும் தற்போது சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர்.
எனினும் விபத்துகள் அதிகரித்து வருவதால், சைக்கிள்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதுடன், ஓட்டுநர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”