;
Athirady Tamil News

மகாராஷ்டிரா புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்..!!

0

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில்.உத்தவ் தாக்கரே தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக ராஜ்பவன் சென்ற அவர், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தொடருமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில், மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஆட்சி அமைப்பது குறித்து இன்று முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், முதலமைச்சர் பதவியை உத்தவ் ராஜிமானா செய்ததால், சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. இதையடுத்து ஆளுநரை இன்று சந்திக்கும் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும், தமக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆளுநர் அழைப்பு விடுக்கும் நிலையில் நாளை அவர் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பதவியேற்பு நாளில் மும்பைக்கு வருமாறு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே முடிவு செய்வார்கள் என்றும்,பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.