இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்” கொண்டாட்டங்களின் பகுதியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான சிநேகபூர்வமான 16 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (29) யாழ் கனகரட்ணம் மத்திய மகாவித்தியால மைதானத்தில் நடைபெற்றது.
பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மற்றும் தூதரக அதிகாரிகள் யாழ் இந்திய துணைத் தூதரகத்திலிருந்து சைக்கிள் மூலம் கனகரட்ணம் மத்திய மகாவித்தியால மைதானத்தை வந்தடைந்தனர்.
யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மற்றும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைகள உதவி பணிப்பாளர் ராஜமல்லிகை போட்டியை ஆரம்பித்து வைத்தனர். போட்டியின் நிறைவில் வெற்றி கிண்ணங்களை வழங்கி போட்டியில் பங்கேற்றவர்களை கௌரவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”