;
Athirady Tamil News

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்!!

0

நாடு பாரிய நெருக்கடியில் இருக்கும் போது நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், நாட்டை அழித்த மோசடிக்காரர்கள் இல்லாத, மக்களின் விருப்பத்தை வென்ற பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட, சரியான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய புதிய கூட்டணியில் இணைந்து கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தமது உழைப்பால், நிபுனத்துவத்தால்,அறிவால் மற்றும் திறனால் பங்களிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் தொழில் வல்லுநர்களின் ஒன்றுகூடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடி நிலவரம் தொடர்பாக தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் முன்வைக்கும் விளக்கத்தை விடவும் நிலமை மிகவும் சிக்கலானது எனவும், நாட்டில் தற்காலிகமாக ஆட்சியைப் பொறுப்பேற்ற வாயில்காவலர்கள் கூட இதற்காக தமது அதிகாரத்தை முறைகோடாக கையாள்வதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனால் அதிக பணவீக்கம்,வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டு மக்களின் அபிலாஷைகள் கூட சிதைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு, பழங்குடி வன்முறை மோதல்களால் கிட்டத்தட்ட எட்டு இலட்சம் உயிர்களை இழந்த ருவாண்டா, இன்று ஆப்பிரிக்காவில் ஓர் சிங்கப்பூராக மாறிவிட்டமை அந்நாட்டு ஆட்சியாளர்களும் புத்திஜீவிகளும் எடுத்த சரியான முடிவுகளால் தான் எனவும்,அதை முன்னுதாரணமாகக் கொண்டு,நமது நாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களின் அறிவை நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொள்கை வகுப்புச் செயற்பாடு முதல் அதை நடைமுறைப்படுத்துவது வரையிலான பணியில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் புத்திஜீவிகள்,தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களின் அறிவு, அனுபவம் மற்றும் திறமைகள் பயன்படுத்தப்பட்டாலும், அது மற்றுமொரு வியத்மக போன்று அமையாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் வியத்மகவினால் கட்டுக்கதைகள்,பொய்கள் மற்றும் ஏமாற்றுகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே 2019 பெருன்பான்மை மக்கள் வீழ்ந்த வலையில் மேலும் சிக்காது, 6 முதல் 10 மாதங்களில் நாடு கட்டியெழுப்படும் என்ற ஏமாற்று வித்தைகளுக்குப் பலியாகாமல் அடுத்த 5 ஆண்டுகளில்,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒன்றிணைந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.