நியூசிலாந்து நாட்டில் பெண் போலீஸ் பணிக்கு கேரள இளம்பெண் தேர்வு..!!
கேரள மாநிலம் புளிக்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். இவரது மகள் அலீனா. இவர் நியூசிலாந்து நாட்டின் பெண் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு நியூசிலாந்து நாட்டின் பெண் போலீஸ் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது பற்றிய தகவலை பாலா தொகுதி எம்.எல்.ஏ. மாணி சி காப்பன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கேரளாவில் இருந்து நியூசிலாந்து போலீஸ் துறையில் பணியில் சேரும் முதல் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு உள்ளார். நியூசிலாந்து நாட்டின் பெண் போலீசாக நியமிக்கப்பட்டுள்ள அலீனாவுக்கு கேரள மக்கள் பலரும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.