ஜனாதிபதியின் கட்டளை நாளை பாராளுமன்றத்திற்கு!!
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விடுக்கப்பட்ட கட்டளையுடன் தொடர்பான பிரகடனம் நாளை (06) விவாதமின்றி பாராளுமன்றத்தின் அனுமதிக்காகச் சமர்பிக்கப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (03) வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தக் கட்டளை விடுக்கப்பட்டது.
அதற்கமைய, இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருட்கள் வழங்கல் அல்லது விநியோகம் மற்றும் வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு உள்ளிட்ட சுகாதார தொழிற்றுறையுடன் தொடர்புபட்ட சேவைகள் அத்தியாவசிய பொதுச்சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.