அத்தியாவசியமின்றி இலங்கை செல்லாதீர் !!
அத்தியாவசிய விடயங்களை தவிர இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.
நேற்று (05) புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைக்கு அமைய இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையால் வணிகம், அவசரநிலை மற்றும் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று பிரித்தானிய வெளிநாட்டு பொதுநலவாய அலுவலகம் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து தூதரகம் ஆகியவை தமது பிரஜைகளிடம் அறிவித்துள்ளன.
நாளாந்தம் மின் தடைப்படுவதன் காரணமாக வன்முறை, அமைதியின்மை மற்றும் போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது.
வீதி மறியல்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மிகக் குறுகிய காலத்தில் நடக்கலாம் என்று குறித்த நாடுகள் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.