அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அறிவிப்பு!!
அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருள் கப்பல்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐஓசி நிறுவனம் எங்களுக்கு வழங்கிய முதல் பெட்ரோல் கப்பல் வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வரும்.
இந்த நாட்டிற்கு தேவையான எரிபொருளை குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றிடம் இருந்து இம்மாதம் 13ஆம் திகதிக்குள் கொண்டு வருவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு நேற்று இரவு எமக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் நாங்கள் வழமையாக பெறும் விலையை விட அதிக விலையை முன்வைத்துள்ளனர்.
அந்த நிறுவனத்திற்கு தேவையான முன்பணத்தை இன்று செலுத்துகிறோம். வரும் 15ம் திகதி கப்பல் எங்கள் நாட்டிற்கு கிடைக்குமென நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.