;
Athirady Tamil News

இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்து கொள்ள சமஸ்கிருதம் உதவுகிறது- வெங்கையா நாயுடு..!!

0

பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது: சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும். அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசுஉதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது. குடும்பம் குடும்பமாக, சமுதாய அளவில் மற்றும் கல்வி நிறுவனங்களால் தான் அந்த மொழி உயிர்ப்புடன் திகழும். சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது செம்மொழிகளைப் பாதுகாத்து, அதனை பரவச் செய்வதற்கு, தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது. பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சமஸ்கிருத கட்டுரைகளின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை புத்தகங்களாக வெளியிடுவது தான், சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்துகொள்ள சமஸ்கிருதம் நமக்கு உதவுகிறது. இந்தியா குறித்து அறிந்து கொள்ள ஒருவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.