ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சேதம்!!
ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த இடங்களில் உள்ள புராதன மற்றும் கலாசாரப் பொருட்கள் மேலும் அழிந்து போவதையோ அல்லது காணமல் போவதையோ தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த இடங்களில் உள்ள பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாக்க கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (12) பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.