நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி விநியோகம் !!
காரைதீவு 12 ஆம் பிரிவில் சமகால பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி விநியோகம் செய்யப்பட்டது.
பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த காரைதீவைச் சேர்ந்த அகிலன் சுஜீவா தம்பதியினர் 140 குடும்பங்களுக்குமான 140 அரிசி பொதிகளை கையளித்தார்கள்.
இதன் போது, காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜனும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.