இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!
இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதி பதவியை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகிறது.
இலங்கை வரலாறு காணாத பெரும் பொருளாதார சீரழிவில் சிக்கி இருக்கிறது. இதனை சீரமைக்க முடியாத காரணத்தால் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தார். மேலும் இலங்கையை விட்டே கோத்தபாய ராஜபக்சே ஓடிவிட்டார்.
இதனால் இலங்கையின் ஜனாதிபதியை அந்நாட்டு அரசியல் சாசனப்படி நாடாளுமன்ற எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். பெரும்பான்மை எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இலங்கையின் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்கே, புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே.
இதனிடையே நாட்டை சீரழித்த ராஜபக்சேக்களின் கூட்டாளியான ரணில் விக்கிரமசிங்கே, ஜனாதிபதியாக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரணில் விக்கிரமசிங்கே தமது பதவியை ராஜினாமா செய்யும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என்று காலிமுகத் திடல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)
8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்!!
திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!
நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!
தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)