கேரளாவில் குரங்கு காய்ச்சலால் மேலும் ஒருவர் பாதிப்பு..!!
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதியானது. இதன்மூலம், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3-வது நபர் இவராவார். மலப்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஜூலை 6-ம் தேதி தென் மாநிலத்திற்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.