;
Athirady Tamil News

ஃபைசர் தடுப்பூசியின் காலாவதி நீட்டிப்பு !!

0

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஃபைசர் தடுப்பூசியின் காலாவதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் விநியோகப் பிரிவின் பரிந்துரைக்கு அமைய ஃபைசர் தடுப்பூசியின் காலாவதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 90-60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்படும் தடுப்பூசிகளின் காலாவதி காலம் 9 முதல் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவிப்புக்கு அமைய 72 கொரோனா தொற்றாளர்களும் 02 கொரோனா மரணங்களும், நேற்று முன்தினம் பதிவாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.