வேளாண்மைக்கு முன்னுரிமையில் எரிபொருள்!!
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிறுபோக வேளான்மை அறுவடை மேற்கொள்வதற்கு ஏதுவாக அறுவடை இயந்திரங்களுக்கும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு செல்வதற்கான உழவு இயந்திரங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட சுமார் 07 ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகளில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அஸ்ரப் தெரிவித்தார்.
எனவே, அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸின் அறிவுறுத்தலுக்கமைய, பிராந்திய விவசாயிகளுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் நெல் அறுவடை சீராக நடைபெற வேண்டுமென்பதற்காக சகல விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 லீட்டர் டீசல் கிரமமான முறையில் வழங்குவதற்கு எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களுக்கு கமநல சேவை மத்திய நிலையத்தினூடாக வழங்கப்பட்டுள்ள எரிபெருள் பங்கீட்டு அட்டையுடன் உரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்ற போதிலும் வேளான்மை அறுவடை செய்வதற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.