அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!
சர்வதேச உதவிகள் தேவைப்படும் இந்நேரத்தில், சர்வதேசத்தைப் பகைத்துகொள்வது போன்று நாட்டில் அவசரகாலச் சட்டத்தை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்படப்போவதாகவும் எச்சரித்தார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் நாட்டில் உள்ள ஏனைய எந்தவொரு சட்டங்களை புறக்கணித்துவிட்டு அரசாங்கத்தால் இனி செயற்பட முடியும். மேலும், நாட்டில் உள்ள தற்போதைய அனைத்து சட்டங்களும் இதனால் வலுவற்றதாகிவிடும். அவசரகாலச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டதை நியாயப்படுத்த முடியாதெனவும் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சாதாரண சட்டங்களே நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கையாள்வதற்கு போதுமானது. இதனாலேயே நான் அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தேன். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறுகிறார். சர்வதேச சட்டங்களுக்கு அமைய இதுபோன்ற செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் உதவிகள் இலங்கைக்கு தேவைப்படும் இத்தருணத்தில், காலி முகத்திடல் தாக்குதலை சர்வதேச நாடுகள் கடுமையாக கண்டித்திருந்தன. அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 51ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இது இலங்கைக்கு முக்கியமான ஒன்றாகும்.அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி இலங்கையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே ஐ.நாவில் அதிகமாக பேசப்படும் என்பதை ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டுள்ள முன்னாள் வெளிவிவாகர அமைச்சராக நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.
எனவே தற்போது அமல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் ஐ.நாவில் இலங்கைக்கு
பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதேபோல் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் உதவிகளோ அல்லது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைகளோ கிடைக்கவில்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. இதனால் எமது நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள் என்றார்.
நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!
இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)
கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!
போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!
இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)
கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)
பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!
செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!