வவுனியா எரிபொருள் நிலையத்தில் முககவசம் அணிந்து செல்பவர்களுக்கே எரிபொருள் விநியோகம்!!
வவுனியாவில் எரிபொருள் பெற்றுக் கொள்ள செல்லும் பொது மக்களை முககவசம் அணிந்து வருமாறும் முககவசம் அணிந்து செல்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளாளது.
வவுனியா ஈரப்பெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்பச் சென்ற பொது மக்களுக்கு அங்கு பணியாற்றும் ஊழியர்களினால் இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் எரிபொருள் பெற்றுக் கொள்ளவதற்குச் செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.