இலங்கையின் முடிவை வரவேற்கிறார் அன்புமணி !!
1987 ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சீனாவின் யுவான் வாங் 5 என்ற நீர்மூழ்கிக் கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்காத இலங்கை அரசாங்கத்தின் முடிவையும் வரவேற்பதாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?